News April 28, 2025

தி.மலை கோயில் பணம் வீண்- ஐகோர்ட் கேள்வி

image

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் ஒரு நிறுவனம் சார்பில் அன்னதானம் சமைப்பதற்கு சிலிண்டர் ஒன்று ரூ.1,830க்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் வேறு ஒரு நிறுவனத்திடம் தலா ரூ.1,950 வீதம் எரிவாயு சிலிண்டர் வாங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குறைந்த விலையில் சிலிண்டர்கள் கிடைக்கும் போது அதிக விலைக்கு வாங்குவது ஏன்? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Similar News

News September 16, 2025

தி.மலை: குழந்தை வரம் தரும் அற்புத தலம்

image

போளூர் அருகே இயற்கை எழில் சூழ்ந்த சம்பந்தகிரி மலைகளுக்கு அருகே அருணகிரிநாதரால் போற்றிப்பாடப்பெற்ற பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலமுருகன் கோவில் உள்ளது. குறிப்பாக இத்தலத்தில் பத்து நாள் திருவிழாவாக நடைபெறும் பங்குனி உத்திர பெருவிழாவில் ஸ்ரீ பால முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இத்தலத்தில் ஐதீகமாகவே உள்ளது. இந்த தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 16, 2025

தி.மலையில் மழை அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து 2 நாட்களாக அதிகமான வெயில் காணப்பட்ட நிலையில் அப்பகுதிகளில் இன்று மற்றும் நாளை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை அறிக்கை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தேவைகளை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

News September 16, 2025

தி.மலை: சைபர் கிரைம் எண்களை தெரிஞ்சிக்கோங்க

image

தி.மலை மக்களே! மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் யுகத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200 மற்றும் TOLL FREE NO-1930 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள்!

error: Content is protected !!