News April 29, 2025
தி.மலை கோயிலில் திரைப்பட இயக்குனர் பாலா சாமி தரிசனம்

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார் அருளை பெறுகின்றனர். இத்தகைய பிரசித்து பெற்ற கோவிலில் திரை பிரபலங்களும் அரசியல் ஆளுமைகளும் சாமி தரிசனம் செய்ய வருவதுண்டு. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் (ஏப்.29) இன்று பிரபல திரைப்பட இயக்குனர் பாலா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது. மேலும், ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
Similar News
News November 28, 2025
தி.மலை: தீபத்துக்கு போறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க!

தி.மலை கார்த்திகை மகா தீபம் டிச.3ல் நடைபெறுகிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்நிலையில், அரசு பிரத்யேக மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், தற்காலிக பேருந்து நிறுத்தம், கார் பார்க்கிங், குடிநீர் வசதி, மருத்துவ முகாம், கழிவறைகள், ஆம்புலன்ஸ் வசதி எங்குள்ளது என தெரிந்துகொள்ளலாம். இந்த <
News November 28, 2025
தி.மலை: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <
News November 28, 2025
தி.மலையில் பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் வேலு

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு (நவ.28) திருவண்ணாமலை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வருவாய்த்துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் கருணை அடிப்படையில் சமையலர், சமையல் உதவியாளர், சத்துணவு அமைப்பாளர், அலுவலக உதவியாளர், சாலை பணியாளர், உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.


