News April 18, 2024
தி.மலை: காங்கிரசில் இணைந்த பாஜக நிர்வாகி

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர். செங்கம் G.குமார் முன்னிலையில் பாஜக தொழிலாளர் பிரிவு மாவட்டத் செயலாளர் ரமேஷ் இன்று காங்கிரசில் இணைந்தார். இதில், காங்., நகர தலைவர் காந்தி, வட்டாரத் தலைவர்கள், மற்றும் கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டு CS ரமேஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் பாஜக நிர்வாகியின் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 9, 2025
தி.மலை: பெண் போலீசை அறைந்த ஆந்திர மக்கள்!

போளூர் ஸ்டேஷன் பெண் போலீஸ் மேகனா, நேற்று முன்தினம் தி.மலை கோயிலில் பணியில் இருந்தார். வரிசையில் நின்ற பக்தர்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த போது, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அவரை தாக்கினர். இதனால் மேகனா புகாரின்படி, ஆந்திர மாநில பக்தர்களான சரிதா, அர்சிதா, வீரேஷ், சைனீத், மாணிக்கராவ் ஆகியோர் மீது தி.மலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 9, 2025
தி.மலைக்கு வந்த அன்புமணி ராமதாஸ்

திருவண்ணாமலையில் மூலவர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மனை இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி & அன்புமணி ராமதாஸ் சகோதரி கவிதா கணேஷ் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வின் போது உடன் பலர் கலந்து கொண்டனர்.