News May 8, 2025

தி.மலை கலெக்டர் க.தர்ப்பகராஜ் அறிவிப்பு

image

தி.மலை கம்பன் தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில், பிரதம மந்திரி தேசிய அப்ரெண்டிஷ்சிப் மேளா என்ற மாவட்ட அளவிலான தொழில்பழகுநா் சோ்க்கை முகாம் வரும் 13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் வழங்கப்படும். முகாமுக்கு வரும் பயிற்சியாளர்கள் அதன் விவரத்தை அனைத்து அசல் நகல் சான்றிதழ்களுடன் நேரில் எடுத்து வரவும்.

Similar News

News August 31, 2025

தி.மழை மக்களே மின்சார பிரச்சனையா இதை பண்ணுங்க

image

தி.மலை: மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் இங்கே <>கிளிக் செய்து<<>> “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம் அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News August 31, 2025

தி.மலை: மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

image

செய்யாறு தாலுகா, பெருங்கட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (43), நேற்று (ஆகஸ்ட்-30) மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது நிலை தடுமாறி விழுந்து காயமடைந்தார். பின்பு காயமடைந்த அவரை செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்,இருந்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரின் மகள் லட்சுமி புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News August 31, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தி.மலை வருவாய் கோட்டத்தை சேர்ந்த திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு மற்றும் கீழ்பென்நாத்தூர் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தை வரும் செவ்வாய்க்கிழமை அன்று வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் தி .மலை கலைஞர் பன்னாட்டு நூற்றாண்டு அரங்கில் நடத்துமாறு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

error: Content is protected !!