News May 17, 2024
தி.மலை கலெக்டர் உத்தரவு

தி.மலை மாவட்டத்தில் இயங்கும் வாகன புகை பரிசோதனை மையங்கள் உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அந்தந்த வாகன புகை பரிசோதனை மையத்துக்கான தனிப்பட்ட கைப்பேசியை உரிமையாளரால் பயன்படுத்த வேண்டும். மேலும் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கியுள்ள மென்பொருளை தங்களது கருவியில் பொருத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கரபாண்டியன் அறிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
தி.மலை: லாரி மோதி நடிகர் பலி!

தி.மலை, செய்யாறு, பல்லி கிராமத்தைச் சோ்ந்த நாடக நடிகா் ரஞ்சித்குமாா் (46) இவா் தனது நண்பரான சின்னப்பையனுடன் நேற்று (செப்.17) பைக்கில் காஞ்சிபுரம் சென்று கொண்டிருந்தாா். மாமண்டூா் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நாடக நடிகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தூசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News September 18, 2025
தி.மலை: பட்டாவில் திருத்தம் செய்வது இனி ஈஸி!

தி.மலை மக்களே! தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் & புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ’TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News September 18, 2025
தி.மலையில் பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

தி.மலை பட்டதாரிகளே..தொழில் முனைய ஆர்வம் உள்ளவரா நீங்கள்? பணம் இல்லையே என கவலை வேண்டாம். தமிழக அரசால் உங்கள் ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க <