News April 2, 2025
தி.மலை: எழுத்தாளா் உடல்நலக் குறைவால் காலமானார்

திருவண்ணாமலை காந்தி நகர் புறவழிச் சாலையைச் சோ்ந்த எழுத்தாளா் ந.சண்முகம் (75) உடல்நலக் குறைவால் (ஏப்ரல் 1)நேற்று காலமானாா். இவரது தமிழ்ப் பணியை பாராட்டி தமிழக அரசு அகவை முதிா்ந்த தமிழறிஞா் விருதை வழங்கியது. இவருக்கு மகன் மணிமாறன், மகள் உமாதேவி ஆகியோர் உள்ளனர். ந.சண்முகத்தின் இறுதி சடங்கு திருவண்ணாமலையில் புதன்கிழமை (ஏப்.2) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
தி.மலையில் இன்று மின்தடை!

தி.மலையை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (நவ.15) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை நடைபெறவுள்ளது. இதனால் ஊசாம்பாடி, வேங்கிக்கால், நம்மியந்தல், வள்ளிவாகை, நொச்சிமலை, வட ஆண்டாப்பட்டு, சடையனோடை சேரியந்தல், வட அரசம்பட்டு, கீழ் நாச்சிபட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (நவ.15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News November 15, 2025
தி.மலை: திரைப்பட இயக்குனர் காலமானார்!

தி.மலை, நெய்வனத்தில் பிறந்த, பிரபல தமிழ் இயக்குனர் வி.சேகர் கடந்து 10 நாட்களுக்கு மேலாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார். ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘வீட்டோட மாப்பிள்ளை’ உள்ளிட்ட படங்களை வி.சேகர் இயக்கியுள்ளார். இவரின் இறப்பு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
News November 15, 2025
தி.மலை: இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 14/11/2025 இரவு பத்து மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். தாங்கள் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும், தங்களுக்கு பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டளோ, அவசர காலத்திற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.


