News December 31, 2024
தி.மலை: உண்டியல் காணிக்கை ரூ.2.41 கோடி

திருவண்ணாமலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று திருக்கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் ஜோதி தலைமையில், நிரந்தர உண்டியல், கார்த்திகை தீபம் வெள்ளிக்குடம் உண்டியல் உள்ளிட்டவை திறக்கப்பட்டதில் ரூ.2.41 கோடி ரொக்கம், 65 கிராம் தங்கம், 1,350 கிராம் வெள்ளியை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
Similar News
News November 20, 2025
தி.மலை: தீபத் திருவிழா பணிகள் குறித்து ஆய்வு

தி.மலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாநகராட்சி செங்கம் சாலையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொணடனர். இதில் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் இரா.கஜலட்சுமி, ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் இன்று (நவ.20) நடைபெற்றது.
News November 20, 2025
தி மலை :உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தாமரைக்கேணி மற்றும் மலை ஓடைகள் ஆக்கிரமிப்பு குறித்து மனுதாரர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா,நீதிபதி ஜி.அருள்முருகன் இன்று (நவ.20) விசாரித்தனர். 300 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியதை நீதிமன்றம் கேள்வி எழுப்பி,உரிமை இல்லாத ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு.
News November 20, 2025
தி.மலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி

தி.மலையில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது. நாளை (நவ.21),வெள்ளிக்கிழமை, காலை 10 மணிக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கத்தில் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, தி.மலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளவும்.


