News March 27, 2025
தி.மலை: இயக்குனர் விக்னேஷ் சிவன் சுவாமி தரிசனம்

தி.மலை அருள்மிகு ஶ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளி மாநில மற்றும் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து கிரிவலம் செல்கின்றனர். இந்நிலையில், இன்று (மார்ச். 27) காலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற கோ பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்தார்.
Similar News
News September 19, 2025
தி.மலை: இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் (18.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 18, 2025
தி.மலை: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும்.உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News September 18, 2025
தி.மலை உழவர் சந்தையின் காய்கறி விலை நிலவரம்

தி.மலை உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, (ஒரு கிலோ) தக்காளி ரூ.20-25, உருளை ரூ.30-40, சின்ன வெங்காயம் ரூ.50-60, பெரிய வெங்காயம் ரூ.20-30, மிளகாய் ரூ.60-80, கத்தரி ரூ.33-42, வெண்டை ரூ.15-20, முருங்கை ரூ.80-100, பீர்க்கங்காய் ரூ.33-42, சுரைக்காய் ரூ.15-20, புடலங்காய் ரூ.15-24, பாகற்காய் ரூ.40-50, முள்ளங்கி ரூ.20-25, பீன்ஸ் ரூ.40-48 என விற்பனை செய்யப்படுகிறது.