News August 17, 2024
தி.மலையில் ரூ. 6 கோடிக்கு மது விற்பனை

தமிழகம் முழுவதும் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. எனவே சுதந்திர தினத்திற்கு முன்தின நாளான ஆக 14 ஆம் தேதி அனைத்து கடைகளிலும் விற்பனை அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 206 டாஸ்மாக் கடைகளிலும் ஆக 14ஆம் தேதி ஒரே நாளில் ரூ. 6 கோடியே 63 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 18, 2025
தி.மலை: மனைவிக்கு சரமாரி அடி – கணவன் கைது!

தி.மலை: பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபு, செவ்வந்தி. கணவன் மனைவியான இவர்கள், கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், நேற்று கணவர் வீட்டில் இருந்த 9 வயது மகளை அழைத்துச் செல்ல செவ்வந்தி வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், பிரபு தனது உறவினர்கள் 4 பேருடன் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

தி.மலையில் தொடரும் தீக்குளிப்பு முயற்சிகள்!

திருவண்ணாமலை கஸ்தம்படி கிராமத்தைச் சேர்ந்த சரவணன்–ஜோதி தம்பதி, நிலத்தகராறு மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்காததால் நேற்று (நவ.17) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். கடந்த வாரம் ஒரு தம்பதியர் தீக்குளிக்க முயன்றதில், பூங்கொடி என்பவர் உயிரிழந்தார். தொடர்ச்சியாக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.