News April 12, 2024
தி.மலையில் ரூ. 4.52 கோடி பறிமுதல்

திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி கடந்த 27 நாட்களில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றதாக ரூ. 4.52 கோடி பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதன் அடிப்படையில் ரூ. 82 இலட்சம் விடுவிக்கப்பட்டது.
Similar News
News December 9, 2025
தி.மலை: உங்க நிலத்தை காணமா??

தி.மலை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா?சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <
News December 9, 2025
தி.மலை: கஞ்சா வைத்திருந்த 3 போலி சாமியார்கள் கைது

செய்யாறு வடதண்டலம் பஸ் நிறுத்தம் அருகே ருத்ராட்சம் அணிந்துகொண்டு 3 பேர் சாமியார் வேடத்தில் நின்றிருந்தனர். அவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். முன்னுக்குபின் முரணாக பதில் அளித்த நிலையில் இவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்ததில் 85 கிராம் கஞ்சா, 5 லிட்டர் தென்னங்கள் ஆகியவை இருந்துள்ளது. 3 போலி சாமியார்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
News December 9, 2025
தி.மலை: பெண் போலீசை அறைந்த ஆந்திர மக்கள்!

போளூர் ஸ்டேஷன் பெண் போலீஸ் மேகனா, நேற்று முன்தினம் தி.மலை கோயிலில் பணியில் இருந்தார். வரிசையில் நின்ற பக்தர்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த போது, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அவரை தாக்கினர். இதனால் மேகனா புகாரின்படி, ஆந்திர மாநில பக்தர்களான சரிதா, அர்சிதா, வீரேஷ், சைனீத், மாணிக்கராவ் ஆகியோர் மீது தி.மலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


