News May 10, 2024
தி.மலையில் இலவச தடகளப் பயிற்சி முகாம்

தி.மலை மாவட்ட தடகள சங்கம் சார்பில் இலவச கோடைகால தடகளப் பயிற்சி முகாம் வரும் மே 15 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மே 13 மற்றும் 14ம் தேதிகளில் தங்களது பெயர்களை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2025
தி.மலை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

திருவண்ணாமலை மாவட்ட மக்களே வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 20, 2025
தி.மலை மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

தி.மலை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
33. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News November 20, 2025
தி.மலை மக்களே நாளை மறக்காதீங்க!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவம்பர் 21, 2025 (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 3 மணி வரை சிறு அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்துகின்றன. இதற்கு முன்பதிவு www.tnprivatejobs.tn.gov.in மூலம் அவசியம். ஷேர் பண்ணுங்க.


