News April 13, 2025
திறனறிவு தேர்வில் 508 பேர் தேர்ச்சி பெற்று மாநில சாதனை

மாநில அளவில் தேசிய வருவாய் வழி திறனறிவு தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. சுமார் 2 லட்சத்து 65 ஆயிரம் பேர் எழுதி, இந்த தேர்வில் மாநில அளவில் 6595பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 508 பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் சாதனை பிடித்துள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பிளஸ் 2 பயிலும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
Similar News
News December 8, 2025
நெல்லை: ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

பாளை பொட்டல் கரையிருப்பு பகுதியில் நேற்று அடுத்தடுத்து ரூ.1 கோடி மதிப்பிலான 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் தாழையூத்து நிதீஷ் குமார், கங்கைகொண்டான் சுரேஷ் குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் சுரேஷ்குமாரின் தந்தை கலைஞர் என்பவரை போலீசார் தேடிய நிலையில் அவர் விஷம் அருந்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். போலி கேரள பதிவு கொண்ட கார் கைபற்றப்பட்டது.
News December 8, 2025
நெல்லை: ரயில்வே துறையில் ரூ.42,478 சம்பளத்தில் வேலை ரெடி

நெல்லை மக்களே, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணிகளுக்கான அ|றிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 40 வயதுகுட்பட்ட B.E/B.Tech, B.Pharm படித்தவர்கள் டிச. 25க்குள் இங்கு <
News December 8, 2025
நெல்லையில் இங்கெல்லாம் மின் தடை!

சிவந்திபட்டி, பழைய பேட்டை, கூடங்குளம், வள்ளியூர், திசையன்விளை, கோட்டை கருங்குளம்,களக்காடு, பொருட்காட்சி திடல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச 9) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. குத்துக்கல், டவுன், வாகைகுளம், இடிந்தகரை, இருக்கன்துறை, ஏர்வாடி, அப்பு விளை, குமாரபுரம், முடவன் குளம், மாவடி, குறுக்குத்துறை இதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மனி முதல் 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.


