News March 19, 2024
திருவையாறு: ஆவணமில்லாத ரூ.1,13,800 பறிமுதல்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாலையில் வெட்டாறு பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜு பாண்டி தலைமையில் காவலர்கள் எட்வின் பிரபு, காளிதாசன் குழுவினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கேரளம், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரெஜி என்பருடைய காரில் ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.1,13,800 பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 6, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 5, 2025
தஞ்சையில் ரூ.5 லட்சம் இலவச காப்பீடு: Apply பண்ணுங்க!

தஞ்சை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News November 5, 2025
தஞ்சை: நகை கடையில் திருடிய இருவர் கைது

கும்பகோணம் சாரங்கபாணி கீழ் வீதியில் உள்ள நகைக்கடையில், நேற்று 2 இளைஞர்கள் தங்க டாலர் வாங்குவது போல் நடித்து, 1 கிராம் தங்க டாலரை திருடி தப்பி ஓட முயன்றனர். இதனை சுதாரித்துக்கொண்ட பெண் ஊழியர் சந்தியா விரட்டி சென்று பொதுமக்களின் உதவியுடன் அவர்களை பிடித்தார். இதையடுத்து விசாரித்ததில் மதுரை சேர்ந்த அப்பாஸ்அலி, திருப்பத்தூர் சேர்ந்த முகமது ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


