News August 2, 2024

திருவெறும்பூர்- விமான நிலையத்திற்கு புதிய வழித்தட பேருந்து

image

திருவெறும்பூரில் இருந்து நாவல்பட்டு ஐடி பார்க் 100 அடி ரோடு வழியாக ஐடி பார்க் ஊழியர்கள் பயன்பெறும் வகையிலும் குண்டூர் தனியார் கல்லூரி மாணவி மாணவர்கள் பயன்படும் வகையிலும் அ 100 அடி ரோடு வழியாக விமான நிலையம் வரை பேருந்துகளை இயக்க வேண்டும். திருச்சி டிராபிக் திருவேங்கடம் என்பவர் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளித்துள்ளார்.

Similar News

News November 15, 2025

திருச்சி: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு & 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து நாளை நவ.16-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரசு வேலை தேடும் அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!

News November 15, 2025

திருச்சி: இரும்பு குழாய்கள் ஏற்றி வந்த வாகனம் விபத்து

image

திருச்சி – திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் வண்ணாங்கோவில் பகுதியில், இன்று அதிகாலை அதிக பாரம் ஏற்றிவந்த சரக்குவாகனம் பேரிகார்டு இருப்பது தெரியாமல், பிரேக் பிடித்தபோது, இரும்பு குழாய்கள் சாலையில் விழுந்து சிதறியது. பேரிகார்டு உள்ள பகுதியில் போதிய மின்வெளிச்சம் இல்லாததே இந்த விபத்திற்கு காரணம் என்பதால் பேரிகார்டு உள்ள பகுதியில், மின்விளக்கு ஏற்படுத்திடவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News November 15, 2025

திருச்சி: ரூ.1 லட்சத்துடன் விருது – ஆட்சியர் அழைப்பு

image

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை பயன்படுத்தாமல் இருக்கும் உணவகங்களுக்கு, தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்பு துறை சார்பில் ரூ.1 லட்சம் ரொக்கத்துடன் கூடிய விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த உணவு வணிகர்கள் வரும் நவ.25ம் தேதிக்குள் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!