News September 13, 2024
திருவெறும்பூரில் வாலிபர் படுகொலை

திருவெறும்பூர் அடுத்த சர்க்கார் பாளையம் பனையக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் சுந்தர் என்பவர் நேற்று இரவு உறவினர் வீட்டு மொட்டை மாடியில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதி மிகப் பரபரப்பாக காணப்படுகின்றது. மேலும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
BREAKING: திருச்சி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.24) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News November 24, 2025
திருச்சி: சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ஆமைகள்

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமானத்தில் வந்த பயணிகள் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, பயணி ஒருவர் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட 2477 அரியவகை ஆமைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக நாகையைச் சேர்ந்த பயணியை கைது செய்ததுடன், அவர் கடத்திவந்த ஆமைகளை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
News November 24, 2025
திருச்சி மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) அதிகாலை வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


