News March 19, 2024
திருவாரூர்: EVM இயந்திரம் உள்ள அறைகளில் கலெக்டர் ஆய்வு

மன்னார்குடி வ.உ.சி சாலையில் உள்ள இராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரியில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகள் மற்றும் கண்காணிப்பு கேமரா அறைகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சாரு ஸ்ரீ இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.
Similar News
News December 5, 2025
திருவாரூர் மாவட்டத்தில் ஆட்டோக்கள் ஓடாது

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் சுழற்சி முறையில் ஆட்டோக்கள் இயக்குவதை தடை செய்யக்கோரி, நாளை (டிச.06) காலை 10 மணியளவில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள சிஐடியு தொழிற்சங்கத்தினர் சார்பாக ஆட்டோக்கள் ஓடாது என திருவாரூர் மாவட்ட சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
News December 5, 2025
திருவாரூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

திருவாரூர் துணை மின் நிலையம் மற்றும் கொரடாச்சேரி, அடியக்கமங்கலம் துணை மின் நிலையங்களில் நாளை (டிச.06) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திருவாரூர், கடைவீதி, விளமல், மாவூர், மாங்குடி, அலிவலம், கொரடாச்சேரி, அடியக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
News December 5, 2025
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகள் இரவு நேர கூட்டங்களை தடுக்க காவல்துறையின் உதவிக்கு எங்களது இரவு வந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என திருவாரூர் மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.


