News April 26, 2025

திருவாரூர்: 3935 அரசு பணியிடங்களுக்கான அறிவிப்பு

image

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…

Similar News

News November 28, 2025

திருவாரூர்: புயல் அவசர உதவி எண்கள்!

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், திருவாரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் 1077 அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

News November 28, 2025

திருவாரூர் மாவட்டத்தில் தடை

image

திருவாரூர் மாவட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முத்துப்பேட்டை, ஜாம்பவனோடை, செங்காடு, முனங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்களை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் மீன் பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் எனவும் மீன்வளத்துறை அறிவுறித்துள்ளது.

News November 28, 2025

திருவாரூர்: மழைக் கால அவசர உதவி எண்கள் வெளியீடு

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு பொதுமக்கள் கவனத்திற்கு – பொதுமக்கள் மழைக்கால அவசர உதவிக்கு, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை உதவிக்கு 1077,93456440279,04366-226623, 9043989192, 9488547941, காவல்துறை உதவிக்கு 100, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அரை உதவிக்கு 9498181220, தீயணைப்பு துறை உதவிக்கு- 101, எண்களை தொடர்பு கொள்ளவும்

error: Content is protected !!