News March 26, 2025
திருவாரூர்: வேலைவாய்ப்பு அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் ஆயுஸ் திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய ஆயுஸ் மெடிக்கல் ஆபிஸர், ஆயுஸ் சித்தா டாக்டர், தியோபெடிக் உதவியாளர், மல்டி ப்ரப்போஸ் ஒர்க்கர்ஸ் பணிக்கு செயற் செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம் திருவாரூர் என்ற முகவரியில் வரும் 05.04.25 க்குள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் கலெக்டர் வ.மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 8, 2025
திருவாரூர்: பஸ் பைக் மோதி விபத்து – பெண் பலி

திருவாரூர் மாவட்டம் கட்டக்குடி கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் பாண்டியன்(50), மீனா(47).இருவரும் நேற்று,மான்னர்குடியில் இருந்து கட்டக்குடிக்கு சென்று கொண்டிருந்தபோது, மேலவாசல் என்ற இடத்தில் சுற்றுலா பஸ்சும், பைக்கும் மோதிக்கொண்டன. இதில், சம்பவ இடத்துலே மீனா உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மன்னார்குடி போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 8, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.7) ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News November 7, 2025
திருவாரூர்-திருச்சி கூடுதல் ரயில் இயக்க ஆலோசனை

திருவாரூரில் இருந்து திருச்சிக்கு கூடுதல் ரயில் இயக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது காலை 8:15 மற்றும் மாலை 4:25 மணிக்கு திருச்சிக்கு ரயில் இயக்கப்படுகிறது. கூடுதல் ரயில் இயக்க ஆலோசனை நடைபெறுகிறது என்றும், திருவாரூர் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா உடன் நிறுவ ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


