News March 29, 2024
திருவாரூர்: வர்த்தகர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு

பேரளம் நகரத்தில் மழைநீரை வெளியேற்ற அமைக்கப்படும் வடிகால் நீண்ட நாட்களாக ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக பேரளம் கடைத்தெரு சாலை பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாமல் உள்ளதால் நாள் முழுவதும் மண், தூசிகள் பறந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. ஆகவே இதனை விரைந்து முடிக்க கடையடைப்பு போராட்டம் வரும் 04-04-2024 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 17, 2025
திருவாரூர்: ஆதார் கார்டு தொலைந்து விட்டதா ?

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். <
News September 17, 2025
திருவாரூரில் கல்வி கடன் முகாம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்தியன் ஓவர்சிஸ் இணைந்து நடத்திய மாபெரும் கல்வி கடன் முகாமில் 383 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.4 கோடியே 99 லட்சம் மதிப்பில் கல்வி கடனுக்கான வங்கி வரைவோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வ.மோகனச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
News September 17, 2025
திருவாரூர்: பெரியார் சிலைக்கு மரியாதை செய்த எம்.எல்.ஏ

தந்தை பெரியார் 147-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் க.மாரிமுத்து எம்எல்ஏ பெரியரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார், இந்நிகழ்வில் முத்துப்பேட்டை சிபிஐ ஒன்றிய செயலாளர் எம்.உமேஷ்பாபு உடன் இருந்தார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.