News April 8, 2025
திருவாரூர் வரும் கனிமொழி எம்.பி

திருவாரூர், தெற்கு வீதியில் வருகின்ற ஏப்.13-ஆம் தேதி மாலை 5 மணியளவில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்பி கலந்துகொண்டு கண்டன பேருரை ஆற்றுகிறார். மேலும் இந்நிகழ்வில் அமைச்சர், எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News December 9, 2025
திருவாரூர்: இலவச மருத்துவ முகாம் அறிவிப்பு

கூத்தாநல்லூர் நகர பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற கூத்தாநல்லூர் (ரேடியோ பார்க்) பெண்கள் மேல் நிலை பள்ளியில், வரும் (13.12.2025) சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக, 17 மருத்துவ துறை சார்ந்த மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொது மருத்துவம் அறுவை சிகிச்சை எலும்பு முறிவு முதலிய சிகிச்சைகளை பெறலாம்.
News December 9, 2025
திருவாரூர்: கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக நல்லிணக்கத்திற்காக கபீர் பிரஸ்கார் விருது குடியரசு தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. கலவரம் மற்றும் வன்முறை ஆகியவைகளில் இருந்து பொதுமக்களை காப்பாற்றியது வெளிப்படையாக தெரிகையில் அவரை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் திருவாரூர் மாவட்டத்தில் இருப்பின் இணையதளம் வாயிலாக 15.12.2025குள் பதிவேற்றம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் “சமூக நீதிக்கான தந்தை பெரியார்” விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது விண்ணப்பத்தை, உரிய ஆவணங்களுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்திற்கு வருகிற 18.12.2025-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


