News April 4, 2025
திருவாரூர்: லஞ்சம் வாங்கிய கோயில் செயல் அலுவலர் கைது

திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் ஜோதி. இவர் கோவிலில் எழுத்தராக பணிபுரியும் சசிகுமார் என்பவரின் பழைய சம்பள பாக்கியை விடுவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சசிகுமார் புகார் அளிக்கவே மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோயிலில் லஞ்ச பெற முயன்ற போது ஜோதியை போலீசார் கையும் களவுமாக நேற்று கைது செய்தனர். SHARE
Similar News
News April 19, 2025
போக்குவரத்துக் கழகத்தில் வேலை; விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு முடித்து, விருப்பம் உள்ளவர்கள் ஏப்.21-ம் தேதிக்குள் இங்கு <
News April 19, 2025
வாரண்டி தொடர்பான வழக்கில் நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு

திருவாரூர் அருகே புலிவலத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் டிவி வாரண்டி தொடர்பாக 23.07.2024 அன்று தொடர்ந்த வழக்கில், திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் டிவி நிறுவனம் கார்த்திக்கு 45 நாட்களுக்குள் பழைய டிவியை எடுத்துக் கொண்டு புதிய டிவி (அ) டிவியின் விலையான ரூ.1,49,099 பணத்தை வழங்க வேண்டும். மேலும் நஷ்ட ஈடாக ரூ.1 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.10,000 வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
News April 18, 2025
தியாகி களப்பால் குப்புசாமியின் நினைவு தினம் இன்று …

திருவாரூர் மாவட்டம், களப்பால் கிராமத்தில் அருணாசலம்-சமுத்திரத்தம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் குப்புசாமி. தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் வாழ்ந்த ஏழை விவசாய தொழிலாளர்களின் விடிவெள்ளியாக திகழ்ந்த இவர், தொடர் போராட்டங்களை முன்னெடுத்து, தூக்கு தண்டனை பெற்று உடல்நலக்குறைவால் திருச்சி சிறையில் உயிரிழந்தார். திருவாரூர் மண்ணின் மைந்தர் களப்பால் குப்புசாமியின் 77-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று! SHARE.