News April 18, 2025
திருவாரூர்: ரேஷன் புகார் அளிக்க சிறப்பு எண்

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் தொடர்பான புகார்களை, உங்கள் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு 04366 220510, 9445000295 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News November 28, 2025
BREAKING திருவாரூர்: பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

வங்கக் கடலில் நிலவும் ‘திட்வா’ புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.29) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். SHARE NOW!
News November 28, 2025
திருவாரூர் மாவட்டத்தை புரட்டி போட போகும் புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது திருவாரூர் மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.28) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழையும் நாளை கனமழையும் கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 28, 2025
திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் நிலவும் ‘திட்வா’ புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.28) அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் உத்தரவிட்டுள்ளார். SHARE NOW!


