News April 17, 2025

திருவாரூர் ரூ.56,100 சம்பளத்தில் அரசு வேலை

image

TNPSC குரூப் 1 வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் என மொத்தமாக 72 காலிப்பணியிடங்கள் உள்ளது. 21 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டபடிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.56,100 முதல் 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய<> <>tnpsc.gov.in<<>> <<>>என்ற இணையத்தில் பார்க்கலாம். இதை SHARE செய்யவும்

Similar News

News October 15, 2025

திருவாரூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்!

image

தமிழகத்தில் நாளை (அக்.16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று (அக்.15) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

News October 15, 2025

திருவாரூர் காவல்துறை எச்சரிக்கை

image

வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் பரிவாஹன் என்ற பெயரில் போலி லிங்குடன் APK கோப்புகள் அனுப்பப்படுவதாகவும், இது போன்ற லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் இதன் மூலம் தங்களின் தரவுகள், பணம் திருடப்படலாம் என்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News October 15, 2025

திருவாரூர்: வெள்ளதடுப்பு முன்னெச்சரிக்கை!

image

திருவாரூர் மாவட்டம், தட்டான்கோவில் முள்ளியாறு தலைப்பில் வெள்ளதடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், நீரின் அளவு மற்றும் வெள்ளதடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள், காலிசாக்குகள், மணல் மற்றும் சவுக்குகம்புகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

error: Content is protected !!