News April 7, 2025
திருவாரூர்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை நிர்வாகி (Sales Executive) பணியிடத்திற்கான அறிவிப்பு தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. அனுபவத்திற்கேற்ப ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை இதற்கு மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. டிகிரி முடித்தவர்கள் <
Similar News
News December 19, 2025
திருவாரூர்: மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர், துர்க்காலயா சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் இன்று (டிச.19) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் காலை 10 மணி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல ஒன்றியங்களில் உள்ள மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு அவர்கள் குறை, நிறைகளை பற்றிய கருத்தரங்கம் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
திருவாரூர்: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் வேண்டுமா?

திருவாரூர் மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.
News December 19, 2025
திருவாரூர்: பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை!

திருவாரூரில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி வீட்டிலிருந்து பள்ளிக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். அதே பேருந்தில் மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியைச் சேர்ந்த கொத்தனாராக வேலை செய்து வரும் ஸ்ரீதர் (44) என்பவரும் பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்தில் அந்த மாணவிக்கு ஸ்ரீதர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீதரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


