News April 6, 2025
திருவாரூர்: ரூ.15,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

திருவாரூர் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Sales Executive பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு டிப்ளமோ முடித்தவர்கள் இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.
Similar News
News November 24, 2025
திருவாரூர்: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 24, 2025
திருவாரூர்: லாரி மீது பேருந்து மோதி விபத்து

மன்னார்குடியில் இன்று காலை மகா மாரியம்மன் கோயில் அருகே புதுக்கோட்டையில் இருந்து, ஜல்லி கற்களை ஏற்றி சென்ற டிப்பர் லாரி மீது பின்னால் சென்ற மினி பேருந்து லாரி மீது மோதியது. பஸ்ஸில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
News November 24, 2025
திருவாரூர்: மழையால் இடிந்து விழுந்த வீட்டின் சுவர்

முத்துப்பேட்டை, தர்காஸ் கிராம விவசாய கூலித்தொழிலாளி செல்லதுரை (60) என்பவரது கூரை வீட்டு சுவர், இன்று கனமழையால் இடிந்து வெளிப்புறம் விழுந்தது. இதனால் வீட்டில் இருந்த செல்லத்துரை, அவரது மாற்றுத்திறனாளி மகள், மனைவி மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தநிலையில் பாதிப்பு ஏற்பட்ட இந்த குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும், இலவச வீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


