News May 17, 2024
திருவாரூர்: மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 17) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 7, 2025
திருவாரூர் ரயில் நிலையத்தில் தீவிர பரிசோதனை

திருவாரூர் ரயில் நிலையத்தில் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு நினைவு நாளான நேற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி பயணிகள் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் போலீசார் ரயில் நிலைய நுழைவாயில் தளங்களில் பயணிகளிடம் தீவிரமாக பரிசோதனை நடத்தினார்கள். மேலும், உடமைகள் அனைத்தும் மேற்பார்வை செய்யப்பட்டது.
News December 7, 2025
திருவாரூர்: பண்ணை தொழில் செய்ய சூப்பர் வாய்ப்பு!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News December 7, 2025
திருவாரூர் மாவட்டத்தின் மழை அளவு

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. குறிப்பாக திருவாரூர், கோட்டூர், ராயநல்லூர், பல்லவராயன், கட்டளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் காலை 6 மணி அளவில் 57 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


