News April 13, 2025

திருவாரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறைக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

image

2023-24 கல்வியாண்டு NMMS தேர்ச்சி விழுக்காட்டில் 30வது இடத்தில் இருந்து, 2024- 25 ஆம் கல்வியாண்டில் 20 வது இடத்திற்கு, மாவட்ட கல்வி மேம்பாட்டு திட்டத்தின் விளைவாக முன்னேறி உள்ளோம். இந்த முன்னெடுப்பில் பங்கு கொண்ட மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியப் பயிற்றுனர்கள், கருத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 16, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.15) இரவு 10 மணி முதல் நாளை (நவ.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதில் தங்களது புகாரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News November 16, 2025

திருவாரூர். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்

image

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாரத் கல்லூரியில் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆட்சியர் மோகனசந்திரன்,சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியம் தலைவர் இளையராஜா, பார்வையிட்டு மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

News November 16, 2025

நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (நவ.15) வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை ஆட்சியர் வ.மோகனசுந்தரம் நேரில் பார்வையிட்டார். பார்வையின் போது மாவட்ட தேர்தல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!