News August 15, 2024
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை 11 மணியளவில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டு, சிறப்பிக்க மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News December 6, 2025
திருவாரூர்: தவெக சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

திருவாரூர் மேற்கு மாவட்ட தவெக சார்பில், அம்பேத்கரின் 70வது நினைவு தினம் இன்று மன்னார்குடியில் அனுசரிக்கப்பட்டது. மன்னார்குடி பெருந்து நிலையம் அருகே உள்ள அண்ணல் அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் திருவாரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில், தவெக தொண்டர்கள் அம்பேத்கரின் உருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
News December 6, 2025
திருவாரூர்: பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை!

காரியமங்கலம் கிராமத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் தலைமையில், 22 நபர்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்தை சேதப்படுத்திய வழக்கு திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்த நிலையில், இன்று பி .ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை, 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, திருவாரூர் மகிளா நீதி மன்ற நீதிபதி சரத்ராஜ் அதிரடி உத்தரவுவிடுத்தார்.
News December 6, 2025
திருவாரூர் ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டம் (டிசம்பர் 7) அன்று நடைபெற இருப்பதாக தமிழ்நாடு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஒன்றிய அரசு மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கையை கர்நாடகத்திற்கு திருப்பி அனுப்பியதாக கூறப்பட்ட காரணத்தினால், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.


