News April 4, 2025
திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் கவனத்திற்கு…

தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் மொத்தம் 1,299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு வரும் ஏப்.7-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் tnusrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று மே.3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE NOW
Similar News
News December 6, 2025
திருவாரூர்: உலக மண் தின விழா கொண்டாட்டம்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நேற்று (டிச.5) உலக மண் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மண் வளத்தை காக்க செய்ய வேண்டிய கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர். வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியர்கள் தனுஷ்கோடி, திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ராமசாமி, கருணாகரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர்.
News December 6, 2025
திருவாரூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இதனை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…
News December 6, 2025
திருவாரூர் மாவட்டத்தில் பதிவாகியுள்ள மழையின் அளவு

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றின் ஊடுருவல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் காலை 6 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 160.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


