News March 25, 2025
திருவாரூர் மாவட்டம் தேமுதிக மாநில நிர்வாகி அறிவிப்பு

மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நீடாமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த இரா ஜெயபால் அவர்கள் தேமுதிக தலைமை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்த நிலையில் மார்ச் 24 இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இரா.ஜெயபால்-ஐ மாநில தொழிற்சங்க துணைத் தலைவராக நியமனம் செய்துள்ளார்.
Similar News
News December 6, 2025
திருவாரூர்: உலக மண் தின விழா கொண்டாட்டம்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நேற்று (டிச.5) உலக மண் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மண் வளத்தை காக்க செய்ய வேண்டிய கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர். வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியர்கள் தனுஷ்கோடி, திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியார் ராமசாமி, கருணாகரன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர்.
News December 6, 2025
திருவாரூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இதனை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…
News December 6, 2025
திருவாரூர் மாவட்டத்தில் பதிவாகியுள்ள மழையின் அளவு

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றின் ஊடுருவல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் காலை 6 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 160.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


