News April 26, 2025
திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.26) காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மழையில் மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!
Similar News
News October 18, 2025
திருவாரூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<
News October 18, 2025
திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது. குறிப்பாக அவசர சிகிச்சை டெக்னீசியன், மயக்க மருந்து டெக்னீசியன், அவசர சிகிச்சை அரங்க டெக்னீசியன், உள்ளிட்ட படிப்புகளுக்கு சேர 14-11-2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு உதவி திட்ட அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
திருவாரூர்: அரசு கல்லூரியில் கலை திருவிழா

திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற கலை திருவிழா முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, கலைத் திருவிழா போட்டிகளில் கல்லூரி அளவில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ-மாணவியருக்கு நேற்று பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, வருனணையாளர் போட்டி உள்ளிட்ட பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.