News April 25, 2025

திருவாரூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.25) மாலை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மாலை நேரத்தில் மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!

Similar News

News April 26, 2025

மன்னார்குடி: கடன் பிரச்சினை தீர சிறப்பு வழிபாடு

image

மன்னார்குடி ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ ரணவிமோட்சகருக்கு நாளை (ஏப்.27) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மேல் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. நீண்ட நாள் கடன் சுமை மற்றும் தீராத நோய்கள் உடையோர் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். இதை இப்போதே SHARE செய்யவும்..

News April 26, 2025

திருவாரூர்: 3935 அரசு பணியிடங்களுக்கான அறிவிப்பு

image

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…

News April 26, 2025

திருப்பாம்புரம்: ராகு – கேது தோஷம் நீக்கும் தலம்

image

திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள பாம்பு நாதர் கோயில், ஒரு மிகச் சிறந்த ராகு – கேது தோஷத்துக்கான பரிகாரத் தலம். 18 மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு – கேது பகவான் இடப்பெயர்ச்சி இன்று மாலை 4:20 மணிக்கு நடக்கிறது. இத்தலத்தில் வழிபட்டால் ராகு – கேது தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!