News April 8, 2025
திருவாரூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவெடுத்தது. இதன் காரணமாக இன்று (ஏப்.08) திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழையா கமெண்ட் பண்ணுங்க. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
Similar News
News October 28, 2025
திருவாரூர்: ரூ.3.34 லட்சம் சூதாட்ட பணம் பறிமுதல்!

திருவாரூர் மாவட்டம், குடவாசல் மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் சூதாடுவதாக போலீசார்க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 நபர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.3,34,000 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் பாராட்டியுள்ளார்.
News October 28, 2025
திருவாரூர்: இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

கூத்தாநல்லூர் அருகே சேகரை, மிளகுகுளம் தெருவைச் சேர்ந்த லாரி டிரைவர் புருசோத்தமன் (28) என்பவர், சாலையில் தனியாக நடந்து சென்ற 26 வயதுடைய இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த பெண் கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் கூறிய சாலையில் உள்ள CCTV காட்சியை ஆய்வு செய்ததில் அந்த புகார் உறுதி செய்யப்பட்டு, புருசோத்தமனை கைது செய்தனர்.
News October 28, 2025
திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


