News April 2, 2025
திருவாரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று திடீரென கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் திருவாரூர், தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW!
Similar News
News March 12, 2026
திருவாரூர்: உங்களைத் தேடிவரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <
News March 12, 2026
திருவாரூர்: நாம் தமிழர் கட்சியினர் ஆதரவு திரட்டல்

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி, வலங்கைமான் மேற்கு ஒன்றியம், கோவிந்தகுடி கடைவீதியில் சீமான் பேச்சு மற்றும், மாநாட்டுப் பாடலை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்க செய்தும், துண்டறிக்கைகள் பொதுமக்களிடம் கொடுத்தும், நாம் தமிழர் கட்சி நன்னிலம் வேட்பாளர் பேராசிரியர் தேன்மொழி திலீப் குமாருக்கு ஆதரவு திரட்டப்பட்டது. இந்நிகழ்வில் வலங்கைமான் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News March 12, 2026
திருவாரூர்: நில அளவை உதவி ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை

மன்னார்குடியைச் சேர்ந்த விக்டர்சாலமன் கடந்த 2014-ம் ஆண்டு பட்டா மாறுதல் செய்ய நிலஅளவை உதவி ஆய்வாளர் செல்வராஜனை அணுகிய போது அவர் ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளார். விக்டர்சாலமன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் லஞ்சம் கொடுக்கும்போது போலீசார் செல்வராஜனை கைது செய்தனர். இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் செல்வராஜனுக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.


