News March 28, 2025
திருவாரூர் மக்களே உஷார் – யாரும் வெளிய வராதிங்க!

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 98-102.2 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News December 5, 2025
திருவாரூர்: செவிலியரை தாக்கியவருக்கு சிறை

நன்னிலம் வட்டம், வேதாந்தபுரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பணியில் இருந்த செவிலியரை தாக்கியுள்ளார். இது குறித்து பேரளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரித்து வந்த நிலையில், நேற்று செவிலியரை தாக்கிய மணிகண்டனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
News December 5, 2025
திருவாரூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு…

திருவாரூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 5, 2025
திருவாரூர்: வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 13.12.2025-ம் தேதி அன்று திருவாரூர் விளமல் கல்லுப் பாலம் அருகில், கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இதற்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


