News April 9, 2025
திருவாரூர்: பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் தேர்வு

திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பாக மாவட்ட அளவிலான பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் தேர்வு நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள SDAT மைதானத்தில் வரும் ஏப்.20 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இத்தேர்வில் 30.08.2013-க்கு முன் பிறந்த வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 93450 39690, 86103 42089 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். SHARE NOW!
Similar News
News September 14, 2025
திருவாரூர் அருகே புதுமாப்பிளை தற்கொலை

திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டை அருகே உள்ள உட்காடு தென்பரை கம்மாளர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (33). இவருக்கு திருமணமாகி 1½ மாதம் ஆகிறது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பிரபாகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 14, 2025
திருவாரூர்: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ??

திருவாரூர் மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால், மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். <
News September 14, 2025
திருவாரூர்: சிறப்பு கல்வி கடன் முகாம் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு முடித்தும், உயர்கல்வி பயில நிதியின்றி தவிக்கும் மாணவர்களுக்கென சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வரும் செப்.17 (புதன்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறும் முகாமில், மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி கட்டண விவரம், ஆதார் மற்றும் பான் கார்டுடன் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர்