News August 2, 2024
திருவாரூர்: புதிய மாநில பொதுச்செயலாளர் நியமனம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக புதிய நிர்வாகிகளை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று அறிவித்தார். அதன்படி கட்சியின் புதிய மாநில பொதுச்செயலாளராக குடவாசல் எஸ்.தினகரனை நியமனம் செய்யப்பட்டுள்ளார். 64 வயதாகும் இவர் கடந்த 1983-ஆம் ஆண்டு ஒன்றுபட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியால் திருவாரூர் மாவட்ட தலைவராகவும் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 3, 2025
திருவாரூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருவாரூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்!

திருவாரூர் கல்வி அலுவலர் பணி மாறுதல்

திருவாரூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த சௌந்தர்ராஜன் பணி மாறுதல் பெற்றுள்ளார். திருவாரூர் மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.