News June 28, 2024
திருவாரூர்; பி.ஆர். பாண்டியன் கோரிக்கை

தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில், “தமிழக அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 வழங்கி வருகிறது. இது தமிழக அரசின் ஏமாற்று நாடகம். தற்போது ஒடிசாவில் பதவியேற்ற புதிய அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்குவது போல் தமிழக அரசும் விவசாயிகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்கவேண்டும்” என கூறியுள்ளார்.
Similar News
News November 13, 2025
திருவாரூர்: ரூ.1 லட்சம் பரிசு வேண்டுமா?

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியத் திறனை மேம்படுத்தி உயர்த்தும் நோக்கில், சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்வு செய்து தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக நலத்துறை அலுவலகத்தில் 25/11/2025-ம் தேதி மாலை 5 மணிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 13, 2025
திருவாரூர்: பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையையொட்டி முன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ள கட்டுப்பாட்டு அறை இயங்குகிறது. இதில் இலவச தொலைப்பேசி எண் 1077 என்ற எண் இயங்கிக் கொண்டிருக்கிறது. மழை மற்றும் வெள்ள பாதிப்பு குறித்து தெரிவிக்க விரும்பினால் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News November 13, 2025
திருவாரூர்: இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

கூத்தாநல்லூர் அருகே உள்ள பெரியகுருவாடி, ஜீவா தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (49). இவர் தனது பைக்கில் குலமாணிக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்ற 27 வயது மதிக்கத்தக்க மனவளர்ச்சி குன்றிய பெண் ஒருவருக்கு, ரவிச்சந்திரன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கூத்தாநல்லூர் போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்துள்ளனர்.


