News April 18, 2024

திருவாரூர் நாளை வணிக நிறுவனங்கள் இயங்காது.

image

திருவாரூரில் நாளை (19.04.24) வெள்ளிக்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கினங்க திருவாரூர் நகரத்தில் உள்ள அணைத்து வணிக நிறுவனங்கள் விடுமுறை என்றும், வணிக சங்க தொழிலாளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Similar News

News December 12, 2025

திருவாரூர்: பொதுமக்கள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியரகம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தினை மேம்படுத்தும் வகையில், பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையிலும் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், வருகின்ற டிசம்பர் 13 சனிக்கிழமை காலை 10:30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 12, 2025

திருவாரூர்: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

image

திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை சரகத்திற்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் டிச.10 மாலை மின்சாரம் தாக்கி வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். காட்டூர், வில்லு தெருவைச் சேர்ந்த ரகுராம் என்ற இளைஞர் குளித்துவிட்டு அயன் பாக்ஸ் மூலம் அயன் செய்ய எடுத்த போது, அதிலிருந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இளைஞர் ரகுராமுக்கு திருமணமாகி ஒரு வருடமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News December 12, 2025

திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், (டிச.11) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!