News April 22, 2025
திருவாரூர்: தமிழில் பெயர்ப் பலகை வைக்க காலக்கெடு நிர்ணயம்

தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் கட்டாயம் தமிழில் பெயர்ப் பலகை வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் வரும் மே.15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயர்ப் பலகை வைத்திட வேண்டும் என திருவாரூர் கலெக்டர் மோகனசந்திரன் காலக்கெடு நிர்ணயித்துள்ளார். தவறும் பட்சத்தில் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. SHARE !
Similar News
News November 23, 2025
மன்னார்குடி வாக்குசாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி நகரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் இன்று பார்வையிட்டார். வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை நிரப்புவதற்கும், பூர்த்தி செய்த படிவங்களை சேகரிப்பதற்கும் வாக்குச்சாவடி மையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டது. இவற்றில் பணிகள் சரிவர நடைபெறுகிறதா என்பதை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
News November 23, 2025
திருவாரூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News November 23, 2025
திருவாரூர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <


