News May 8, 2025

திருவாரூர்: தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு

image

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!

Similar News

News November 24, 2025

திருவாரூர்: வீட்டின் மீது விழுந்த ஆலமரம்

image

கோட்டூர் ஒன்றியம், வல்லூர் ஊராட்சியில் நேற்று இரவு திருமக்கோட்டை – வல்லூர் பிரதான சாலையில் மான்கோட்டைநத்தம் பயணிகள் நிழற்குடை அருகே இருந்த மிக பெரிய மரம் அருகில் உள்ள வீட்டில் சரிந்தது. அதிஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. உடனடியாக அரசு அதிகாரிகள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் களப் பணியில் ஈடுபட்டு, உடைந்து விழுந்த மரத்தை வெட்டி சீரமைத்தனர்.

News November 24, 2025

திருவாரூர்: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 24, 2025

திருவாரூர்: லாரி மீது பேருந்து மோதி விபத்து

image

மன்னார்குடியில் இன்று காலை மகா மாரியம்மன் கோயில் அருகே புதுக்கோட்டையில் இருந்து, ஜல்லி கற்களை ஏற்றி சென்ற டிப்பர் லாரி மீது பின்னால் சென்ற மினி பேருந்து லாரி மீது மோதியது. பஸ்ஸில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

error: Content is protected !!