News April 6, 2025

திருவாரூர் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: கலெக்டர்

image

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற ஆழித்தேரோட்ட விழா நாளை (ஏப்.7) நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் நகரில் உள்ள 6 டாஸ்மாக் மதுபானக் கடைகள் நாளை ஆழித்தேரோட்ட திருவிழா முன்னிட்டு இயங்காது என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார். SHARE NOW!

Similar News

News September 19, 2025

திருவாரூர்: இளம்பெண் பரிதாப பலி

image

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, சந்திரசேகரபுரத்தை சேர்ந்தவர் சிவகாமி (23). அரசு போட்டித் தேர்வுகளுக்காக தஞ்சையில் பயிற்சி பெற்று வந்த இவர், நேற்று தனது நண்பர் ஜெயக்குமார் என்பவருடன் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது மணப்படையூர் பைபாஸ் சாலையில் இருவரும் சென்ற டூவீலர் மீது பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிவகாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News September 19, 2025

விஜய் வருகை: திருவாரூரில் மின்தடை அறிவிப்பு

image

தவெக தலைவர் விஜய் வரும் 20-ம் தேதி திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கொடிக்கால்பாளையம், மேட்டுப்பாளையம், மாங்குடி, திருக்கண்ணமங்கை, பவித்திரமாணிக்கம், பெரும்பண்ணையூர், கொரடாச்சேரி, கேக்கரை, அடியக்கமங்கலம், ஓடாசேரி, ஆந்தகுடி, கண்கொடுத்தவனிதம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW

News September 19, 2025

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம்

image

பனை மரத்தை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என்று அறிவிப்பை அரசாணையாக வெளியிட வேண்டுமென பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அரசாணை எண் 238/12.09.2025 மூலம் பனையை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் என அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு பசுமை சூழல் பாதுகாப்பு இயக்க நிறுவனர் பருத்திசேரி ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!