News May 17, 2024

திருவாரூர் கோதண்டராமர் கோயில் சிறப்புகள்!

image

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கோதண்டராம கோயில். 108 வைணவத் தலங்களுள் ஒன்றான இக்கோயில் ராம சேத்திரங்களில் ஒன்றாகும். திராவிடக் கட்டடக்கலைகளை பிரதிபலிக்கும் இத்தலம், புராணக்கதைகளைக் கொண்டு விளங்குகிறது. இக்கோயில், ராமர் கோயில்களுள் சிறப்பாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அனுமன் சன்னதிக்கு பின்புறம் தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. ராமர் கோதண்ட ரூபத்தில் காட்சியளிக்கிறார்.

Similar News

News December 30, 2025

திருவாரூர்: அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

image

முத்துப்பேட்டை, ஆலங்காடு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தலைவர் குணாவதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து அரசு துறை ஓய்வூதியர்கள் சங்க தலைவர் கோவி.ரெங்கசாமி, சிஐடியூ மாவட்ட குழு உறுப்பினர் செல்லத்துரை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.

News December 30, 2025

திருவாரூர்: லாரி மோதி ஒருவர் பலி

image

திருவாரூர், நீடாமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கோவில்வெண்ணி பகுதியில், திருவாரூர்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகில், நேற்று (டிச.29) காலை 8 மணி அளவில் லாரி அதிவேகமாக வந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தற்போது நீடாமங்கலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

News December 30, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (டிச.29) இரவு 10 மணி முதல் இன்று (டிச.30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!