News April 13, 2024
திருவாரூர்: காந்தி சிலை முன்பு வயதான தம்பதி உண்ணாவிரதம்

முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் இடையர்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன். அவரது மனைவி தங்கராணி ஆகியோர் தனது பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று உண்ணாவிரதம் இருந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஏப்ரல்.25ஆம் தேதிக்குள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் அங்கிருந்து புறப்பட்டனர்.
Similar News
News November 14, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (நவ.13) இரவு 10 மணி முதல் இன்று (நவ.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 13, 2025
திருவாரூர்: SIR மாதிரி விண்ணப்பம் வெளியீடு

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விண்ணப்பம் நிரப்பும் முறை குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சார்பில், மாதிரி படிவம் நிரப்பப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப மாதிரியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களுக்கு தரப்பட்டுள்ள சிறப்பு வாக்காளர் பட்டியல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
News November 13, 2025
திருவாரூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <


