News April 28, 2025
திருவாரூர்: காணாமல்போன பெண் சடலமாக மீட்பு

முத்துப்பேட்டை ஜாம்புவானோடை கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி(46) என்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண், கடந்த 23ம் தேதி காணாமல் போயுள்ளார். இதுகுறித்து கணவர் ரமேஷ் முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்திருந்தார். இந்த நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள கந்தபரிச்சான் ஆற்றில் கஸ்தூரி அரைகுறை ஆடையுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். சடலத்தை மீட்ட போலீசார் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Similar News
News April 28, 2025
ரோட்டரி நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்

மன்னார்குடி ரோட்டரி சங்கம் மற்றும் கோவை தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் (04/05/2025) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை வடசேரி சாலையில் உள்ள ரோட்டரி ஹாலில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ரோட்டரி சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் கண்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கு சிகிச்சை குறித்து இந்த முகாம் நடைபெறவிருக்கிறது.
News April 28, 2025
பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை.

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் TamilNilam Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்..
News April 28, 2025
திருவாரூரில் வருகிற 1ம் தேதி கிராம சபை கூட்டம்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 கிராம ஊராட்சிகளிலும், தொழிலாளர் தினமான 01.05.2025 அன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இக்கூட்டத்தில், தொழிலாளர் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல்,ஆகிய இனங்களை இணையவழி செலுத்துவதை உறுதிப்படுத்த பொதுமக்கள் கலந்து கொள்ள ஆட்சியர் மோகனசந்தரன் கேட்டுக் கொண்டுள்ளார்.