News May 7, 2024

திருவாரூர் கம்பீரமான தியாகராஜ சுவாமி கோயில்!

image

திருவாரூரிலுள்ள தியாகராஜ கோயில், சைவ மரபில் பெரிய கோயில், திருமூலட்டானம், பூங்கோயில் என்று அழைக்கப்படுகிறது. நாயன்மார்களால் பாடல் பாடப்பெற்ற இத்தலத்தில், உலகின் மிகப் பெரித் தேரான ஆழித்தேர் கொண்ட கோயிலாகும். இக்கோயிலில் பசுவிற்கு நீதி வழங்கினான் மனுநீதிச்சோழன். பழமையான புராணங்களை கொண்ட இத்தலம் 2000-3000 வருடங்களுக்கு முந்தையது. 9 ராஜகோபுரமும், 80 விமானமும், 12 மதிகள் கொண்ட கம்பீரமான தோற்றமுடையது.

Similar News

News November 20, 2024

திருவாரூர் சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி

image

திருவாரூர் மாவட்டத்தின் 430 ஊராட்சிகளிலும் மனை பிரிவுகளுக்கான அனுமதி மற்றும் கட்டிட அனுமதி எளிதாக வழங்க, ஒற்றைச் சாளரை முறையில் விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டு உடன் அனுமதி வழங்கப்படும். இந்த நடைமுறையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கான அனுமதி சான்றிதழின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது. விபரங்களுக்கு www.onlineppa.tn.gov.in தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

திருவாரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

திருவாரூர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட தகுதியான நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இதில் கலந்து கொள்ள 18 வயது நிரம்பியவர்கள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்றுடன் நேரில் செல்ல ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News November 20, 2024

கலைத்திருவிழா போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும்

image

திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தாலும் திட்டமிட்டபடி இன்று மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறும் எனவும், போட்டிகள் மழையின் காரணமாக சற்று தாமதமாக 11 மணியளவில் துவங்கும் எனவும், பங்கேற்க கூடிய மாணவர்களை பொறுப்பாசிரியர்கள்  பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும் எனவும் திருவாரூர் முதன்மை கல்வி அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.