News August 10, 2024
திருவாரூர் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 32 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, திருவாரூர், நன்னிலம், கூத்தாநல்லூர், மன்னார்குடி உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 8, 2026
திருவாரூர்: டாஸ்மாக் ஊழியர் போக்சோவில் கைது

குடவாசல் அருகே ஒரு அரசு மதுபான கடையில் வேலை பார்ப்பவர் மாறன் (52). இவர் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமியை, தனது வீட்டுக்குள் அழைத்துள்ளார். அதன்பின் அந்த சிறுமிக்கு மாறன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாறனை கைது செய்துள்ளனர்.
News January 8, 2026
திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் கால வாக்குறுதிப்படி சிறப்பு ஓய்வூதியம் ரூ.6 ஆயிரத்து 750-ஐ வழங்க வேண்டும்; ஐகோர்ட்டு தீர்ப்பின் படி 2.57 காரணியால் ஓய்வூதியம் மற்றும் ஊதியத்தை திருத்தி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
News January 8, 2026
திருவாரூர்: சலூன் கடைக்காரர் போக்சோவில் கைது

குடவாசல் அருகே சுரைக்காயூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (25). இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு 7 வயது சிறுவன் ஒருவன் முடி வெட்ட சென்றுள்ளான். அப்போது சலூன் கடைக்காரரான விஜய் அந்த சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுவன் தனது தாயாரிடம் கூறியதையடுத்து, போலீசாரிடம் புகார் கொடுத்ததன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் விஜய்யை கைது செய்தனர்.


