News August 7, 2024
திருவாரூர் எஸ்பியிடம் இன்று 29 புகார் மனு

திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிதாக மனு கொடுக்க வந்த 29 மனுதாரர்களிடம், எஸ்பி ஜெயக்குமார் நேரடியாக புகார் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Similar News
News November 15, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

TNPSC-யால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வுகள் நவ.16 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவுள்ளது. இதில் 170 தேர்வர்கள் எழுத உள்ளனர். கொல்லுமாங்குடி ஏழுமலையான் கல்லூரி, நாகக்குடி மத்திய பல்கலைக்கழகம் ஆகிய மையங்களில் நடைபெறவுள்ளது. இதனால் கூடுதல் பேருந்து இயக்கப்படும் எனவும் தேர்வர்கள் 9 மணிக்குள் தேர்வறைக்கு செல்ல வேண்டுமென ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்..
News November 15, 2025
திருவாரூர் பட்டதாரிகளுக்கு சிறப்பு வாய்ப்பு!

மீன்வளம் & மீனவர் நலத்துறை, சென்னை அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையம் இணைந்து ஆண்டு தோறும் 20 கடல் & உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு பிரத்தியேக குடிமைப் பணி பயிற்சி வழங்குகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே திருவாரூர் மாவட்ட மீனவ இளைஞர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு <
News November 15, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.14) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு தங்களது புகார்களை அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.


