News April 29, 2025
திருவாரூர்: அறிந்துகொள்ள வேண்டிய காவல்துறை எண்கள்

திருவாரூர் மாவட்ட மக்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் எண்கள்: மாவட்ட கண்காணிப்பாளர்-9498110066, திருவாரூர் துணை கண்காணிப்பாளர்-9498100866, நன்னிலம் துணை கண்காணிப்பாளர்-9498100874, மன்னார்குடி துணை கண்காணிப்பாளர்-9498100881, திருத்துறைபூண்டி துணை கண்காணிப்பாளர்-9498100891, முத்துபேட்டை துணை கண்காணிப்பாளர்-9498100897. இதை மறக்காமல் SHARE செய்யவும்!
Similar News
News January 2, 2026
திருவாரூர் மாவட்ட வரலாறு!

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, 01.01.1997 முதன் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 9 ஒன்றியங்களும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1 ஒன்றியத்தையும் சேர்த்து திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் 2 வருவாய்க்கோட்டங்களையும், 9 வருவாய் வட்டங்களையும், 10 ஒன்றியங்களையும், 573 வருவாய்க் கிராமங்களையும் கொண்டுள்ளது. SHARE IT NOW
News January 2, 2026
திருவாரூரில் பெங்களூரு போலீசார் அதிரடி நடவடிக்கை

பெங்களூரு ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த பொறியாளர் வினோத்ராம் என்பவர் வீட்டில் கதவை உடைத்து 30 பவுன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற வழக்கில் பெங்களூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், திருவாரூரில் பதுங்கி இருந்த இந்த வழக்கில் தொடர்புடைய புதுச்சேரியைச் சேர்ந்த ரகுராமன் மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோரை நேற்று பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
News January 2, 2026
திருவாரூர்: தர்கா உண்டியலை உடைத்து திருட முயற்சி!

முத்துப்பேட்டை தெற்கு தெரு அரபு சாஹீப் பள்ளிவாசல் தர்காவின் உண்டியலை யாரோ மர்ம நபர் உடைத்து திருட முயற்சி செய்து உண்டியலின் பூட்டை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தர்கா கமிட்டி தலைவர் தக்பீர் நெய்னா முகமது முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தர்கா உண்டியலை உடைத்து திருட முயன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.


