News April 21, 2025
திருவாரூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

திருத்துறைப்பூண்டி அருகே மடத்துப்புரத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் நேற்றுமுன்தினம் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Similar News
News December 9, 2025
திருவாரூர்: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

திருவாரூர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <
News December 9, 2025
திருவாரூர்: இயந்திரங்கள் குறித்து பயிற்சி அறிவிப்பு

வேளாண் பொறியியல் துறை வேளாண் கருவிகள் பணிமனையில், இயந்திரங்கள் குறித்த செயல் விளக்க பயிற்சி டிராக்டர், நெல் அறுவடை இயந்திரம் உள்ளிட்ட செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயன்பெற விரும்புவோர் candidate.tnskill.tn.gov.in இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்து பயன்படலாம், என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தின் பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.9) மதியம் 1 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!


